160
கூட்டு எதிரணியினரின் “மக்கள் பலம் கொழும்புக்கு” போராட்டமானது இன்று இரவு முடிவுக்கு வந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோர் வீதிகளை துப்புரவு செய்யும் பணிகளில் ஈடுபட்டமையை காணக்கூடியதாக இருந்தது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் மக்கள் பலம் கொழும்புக்கு போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பல வீதிகள் முற்றுகையிடப்பட்டதுடன் போக்குவரத்தும் பாதிக்கப்பட்ட நிலையில் நாட்டின் பல பகுதிகளிளும் இருந்து சென்ற போராட்டக்காரர்கள் கொழும்பின் லோடஸ் சுற்றுவட்டாரப் பகுதியில் ஒன்று கூடினர். இந்நிலையில் இன்று நடுநிசியில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
Spread the love