இரவு ஒன்பது மணிக்கு மேல் தனியாக வரும் பெண்களுக்கு உணவு வழங்கவேண்டாம் என இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணத்தின் ஒரு மாவட்ட நிர்வாகம் உணவு விடுதிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும், திருமணமாகாத அல்லது உறவினர்களாக இல்லாத ஆணும் பெண்ணும் ஒன்றாக அமரக்கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு தற்போது தண்டனை எதுவும் வழங்கப்படாது என்ற போதிலும் , இந்தக்கட்டுப்பாடுகளை முறைப்படி சட்டமாக்க வேண்டும் என உள்ளூர் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்க
அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் இந்தோனேசியாவில் இஸ்லாமிய ஷரியா சட்டம் அமுலில் இருக்கும் ஒரே மாகாணம் ஆச்சே என்பது குறிப்பிடத்தக்கது.