153
ஆதார் எண் இல்லாத காரணத்துக்காக பாடசாலைகளில் மாணவர்களை சேர்க்க மறுக்கக்கூடாது என பாடசாலைகளுக்கு ‘ஆதார்’ ஆணையகம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் ‘ஆதார்’ அடையாள அட்டை ஆணையகம் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் அந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சேர்க்க மறுப்பது செல்லாது. சட்டப்படி அனுமதிக்கத்தக்கதும் அல்ல. ஆதார் எண் ஒதுக்கப்படும்வரை, வேறு அடையாள அட்டைகள் மூலம் அம்மாணவர்களுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும். மேலும், பாடசாலைகளிலேயே ஆதார் சேர்க்கை சிறப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love