குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.
கிளிநொச்சி அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்கப்படுவதில்லை என நோயாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வளவு நாளும் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு உணவு வழங்க்கப்பட்டு வந்த போதும் கடந்த சில தினங்களாக அவை நிறுத்தப்பட்டுவிட்டது எனக் கவலை தெரிவிக்கும் நோயாளர்கள் அக்கராயன் பிரதேசம் கிளிநொச்சி மாவட்டத்தில் மிகவும் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பல கிராமங்களை கொண்ட பிரதேசம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் குமாரவேலிடம் வினவிய போது அக்கராயன் மருத்துவமனை விடுதிகளில் அனுமதிக்கப்படும் நோயாளர்களில் உணவு கோரும் நோயாளர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர்.
குறித்த வைத்தியசாலையில் இதுவரை காலமும் சிற்றூழியர்களே உணவு சமைத்து வந்தனர் கடந்த சில தினங்களாக அவர்கள் சமைப்பதனை நிறுத்திவிட்டதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.