“தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது என்று கூறிக்கொண்டிருப்பவர், மீண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக நிற்க முடியாது. அதற்குச் சாத்தியமில்லை. ஆனால், தானே விரும்புகின்ற தனது நான்காவது தெரிவின்படி, கட்சி அரசியலைவிட்டு விலகி — இங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து — தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெறும் முயற்சியின் ஒட்டுமொத்தமான தலைமை பாகத்தை வகிக்கும் மிக முக்கியமான பாத்திரத்தை ஏற்க அவர் முன்வருவாரானால் – அவரோடு இணங்கி, அவரது (விக்கினேஸ்வரனின்) தலைமைக்குக் கீழ், மிகவும் சந்தோசமாகச் செயற்பட நாங்கள் தயாராகவே இருக்கின்றோம்.” என வசந்தம் தொலைக்காட்சி, அதிர்வு நிகழ்ச்சியில் சுமந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன் காலியில் இடம்பெற்ற கருத்தரங்கில் சமஸ்டி பற்றி தான் கூறிய சந்தர்ப்பம், கேட்கப்பட்ட கேள்வி, அந்தச் சூழல் என்பவற்றை புரிந்து கொள்ளாமல் ஒரு பகுதியை மட்டும் வைத்து விவாதங்கள் தொடர்வதாக குற்றம்சாட்டியுள்ளார்…
அவரது முழுமையான செவ்வியை இந்த இணைப்பில் பார்க்கலாம்.. கேட்கலாம்..
https://www.facebook.com/KuruparanNadarajah/videos/2203227093248113/
M.A. சுமந்திரன் (வசந்தம் தொலைக்காட்சி, அதிர்வு நிகழ்ச்சி, 05/09/2018)
1 comment
தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது தலைமைப் பாத்திரத்தில் தவறிவிட்டது. இதை மாற்றி அமைக்க சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரன் அடங்கிய கூட்டுத்தலைமையை உருவாக்கி இங்கே இருக்கின்ற அரசியல் கட்சிகளையும், வெளிநாடுகளில் இருக்கின்ற தமிழ் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வினைப் பெற முயற்சிக்க வேண்டும். இந்த கூட்டுத்தலைமைக்குக் கீழ், மிகவும் சந்தோசமாகச் செயற்பட சுமந்திரனும் அவரின் ஆதரவாளர்களும் தயாராக வேண்டும்.