யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் வீடுடைப்பு போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட முக்கிய சந்தேகநபரான ஆவா குழுவின் எதிரணியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட யாழ் பருத்தித்துறையைச் சேர்ந்த கணேஜி என்ற இளைஞர் ஆவா குழுவிலிருந்து வெளியேறி தனியாக பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
பல காலமாக தலைமறைவாகியிருந்த இவர் நேற்றையதினம் கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த போது யாழ்ப்பாண நகர் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கைதுசெய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் யாழ். நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக காவல்துறைத்தரப்புகள் தெரிவித்துள்ளன.