214
மலையாள திரையுலகில் காற்றே காற்றே என்ற பாடலையும் தமிழில் ‘சொப்பன சுந்தரி நான்தானே’ என்ற பாடலையும் பாடி மிகவும் பிரபலமான பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் திருமணம் நடைபெறுகின்றது.
பார்வையற்ற மாற்றுத் திறனாளியான பிரபல சினிமா பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி மலையாள திரையுலகில் அதிக பாடல்களை பாடியுள்ளார். பிருதிவிராஜ் நடித்த ஜே.சி.டானியல் படத்தில் இடம்பெற்ற காற்றே காற்றே என்ற பாடல் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
விக்ரம் பிரபு நடித்து திரைக்கு வந்த ‘வீர சிவாஜி’ படத்தில் பாடிய ‘சொப்பன சுந்தரி நான்தானே’ பாடல் மூலம் அவர் மேலும் புகழடைந்தார். என்னமோ ஏதோ படத்தில் ‘புதிய உலகை புதிய உலகை’ பாடல் உள்பட பல திரைப்படங்களில் பாடியுள்ளார்.
வித்தியாசமான குரல் மூலம் ரசிகர்களை கவர்ந்த வைக்கம் விஜயலட்சுமியின் வாழ்க்கை திரைப்படமாக தயாராகின்றது. இப் படத்தை இயக்குனர் விஜயகுமார் இயக்குகிறார்.இப் படத்தில் விஜயலட்சுமியாக கேரளாவில் மீன் விற்று படித்து பிரபலமான மாணவி ஹனன் ஹமீது நடிக்கிறார்.
விஜயலட்சுமிக்கும் சந்தோஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானபோதும் அது இடம்பெறாத நிலையில் பலகுரல் கலைஞர் அனூப் என்பவருக்கும் விஜயலட்சுமிக்கும் திருமணம் செய்து வைக்க இரு வீட்டினரும் முடிவு செய்துள்ளனர்.
அனூப் வீடுகளில் உள் அலங்காரம் செய்யும் நிறுவனத்தையும் நடாத்தி வருகிறார். இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் எதிர்வரும் 10ஆம் திகதி விஜயலட்சுமியின் வீட்டில் நடைபெறுவதுடன் திருமணம் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி வைக்கம் மகாதேவ கோவிலில் நடைபெறுகின்றது.
Spread the love
1 comment
May God bless you dear.