176
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுற்றுலாப்பயணிகளை ஏற்றச் சென்ற குறித்த பேருந்து அதிக வளைவுகள் உடைய வீதியில் செல்லும் போது இவ்வாறு சாதியின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் வீழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும், 9 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love