178
புஸ்ஸெல்லாவ, ஹெல்பொடகம பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இராணுவ சிப்பாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சிப்பாய்க்கும் மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட காணிப் பிரச்சினையின் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திகன இராணுவ முகாமில் கடமையாற்றிய 52 வயதுடைய சிப்பாய் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரை நாவலபிட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love