224
மட்டக்களப்பு உவர் நீர் வாவியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட மீனவரொவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிப்பதற்காக உவர் நீர் வாவிக்குச் சென்றிருந்த மகிழூர்முனை கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான சுந்தரலிங்கம் நவேந்திரன் என்பவரைக் காணவில்லை என காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் நேற்றையதினம் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்;பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love