202
தெற்கு சூடான் நாட்டின் தலைநகரான ஜுபாவில் இருந்து இன்று புறப்பட்டு சென்ற விமானம் ஆற்றுக்குள் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 பயணிகளுடன் புறப்பட்ட தனியாருக்கு சொந்தமான குறித்த சிறிய ரக விமானம் செல்லும் வழியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த 21 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் 6 வயது குழந்தை உள்பட மூன்று பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love