153
தமிழ் சினிமாவில் வடசென்னை கதைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக காணப்படுகின்றன. அன்றைய கால திரைப்படங்களிலிருந்து இன்றைய காலத்தில் வெளியான மெட்ராஸ், மாரி, வடசென்னை என பல திரைப்படங்கள் வடசென்னை கதையை மையப்படுத்தி வெளிவந்துள்ளன.
இந்த நிலையில் தொடர்ச்சியாக பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி அடுத்தடுத்தாக விஜய் சந்தர் இயக்கத்தில் வட சென்னையை மையப்படுத்திய கதை ஒன்றில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் திரைப்படங்களை இயக்கிய விஜய்சந்தர் அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார்.
தன்னுடைய இரு படங்களையும் வடசென்னையை மையமாக வைத்து இயக்கிய இயக்குனர் விஜய் சந்தர் இப் படத்திலும் வடசென்னை தொடர்பான கதையை இயக்கவுள்ளார். தற்போது, விஜய்சேதுபதி 10இற்கும் மேற்பட்ட படங்களை தன்வசம் வைத்துள்ளார். இந் நிலையிலும் பாரம்பரிய நிறுவனமான விஜயவாகினி தயாரிக்கும் திரைப்படம் என்பதால் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பெப்ரவரியில் தொடங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் படத்தில் நடிக்கவிருக்கும் ஏனைய நடிகர், நடிகைகள் குறித்த விபரம் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
Spread the love