ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.இன்று 10 ஆம் திகதி ஆரம்பமாகும் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதன்போது பல்வேறு நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து விரிவாக ஆராயப்படவுள்ளதுடன் நூற்றுக்கணக்கான அறிக்கைகள் நாடுகள் தொடர்பில் தாக்கல் செய்யப்படவுமுள்ளன.
இன்றைய முதலாவது அமர்வில் உரையாற்றவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் மைக்கேல் பசேல் ஜெரியா இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பிரஸ்தாபிப்பார் என்பதுடன் தாமதம் தொடர்பில் கடும் அழுத்தங்களை பிரயோகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.