பிரதமருக்குரிய தகுதிகள் ரணிலுக்கு இல்லை..
பிரதமர் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் ரணில் விக்ரமசிங்கவிடம் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உள்ளிட்ட 7 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (10.09.18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்த்த அவர், கடந்த மக்கள் பலம் ஆர்ப்பாட்டத்தின் போது வழங்கப்பட்ட பால் பக்கட்டுகளில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை நடத்த வேண்டும் என அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக நிதி அமைச்சிற்கு சொந்தமான வான் ஒன்றின் மூலமே குறித்த பால் பக்கட்டுகள் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் எதிரிகளை பழிவாங்கப்படுகின்றனர் – கோத்தபாய..
தற்போதைய அரசாங்கம் அரசியல் எதிரிகளை பழிவாங்கிக் கொண்டிருப்பதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ உட்பட 7 பேர் மீது தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (10.09.18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நூதனசாலையை நிர்மாணித்தமை நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என தன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் உட்பட சிறிய குழுவினரை வேட்டையாடும் அரசாங்கத்தின் செயற்பாடாக இதனை குறிப்பிடலாம் எனவும் கூறியுள்ளார்.
அரசாங்கத்தினால் விஷேட நீதிமன்றம் ஒன்றினை ஆரம்பித்து வழக்குகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பொருளாதரத்தை பாரிய அளவில் பாதித்த ஊழல் தொடர்பில் தேடும் சந்தர்ப்பத்தில் தன்னுடைய வழக்கு இரண்டாம் இடத்தில் இருக்கும் அளவிற்கு பாராதூரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.