180
குளோபல் தமிழ் செய்தியாளர்
தமிழர்களின் வரலாற்று தொன்மைமிக்க ஆலயமாக காணப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் இன்றைய தினம் பொங்கல் வழிபாடுகள் இடம்பெற்றன.
தமிழர்களின் தொன்மங்கள் நிறைந்த செம்மலைப் பகுதியில் பௌத்த, சிங்கள தொன்மங்களை திணிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செம்மையில் சில இடங்களில் புத்தர் சிலைகளும் சிறிய விகாரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்திற்கு அருகிலும் மீள்குடியேற்றத்தின் பின்னர் புத்தர்சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இப் பகுதியை ஆக்கிரமிக்கவும் அங்கு பிரதேசத்திற்கு புறம்பான அடையாளங்களை நிறுவவும் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
இந் நிலையில் சைவ சமய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகள் அப் பகுதி இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று திங்கட் கிழமை பிரதேச மக்கள் பிள்ளையாருக்கு பொங்கல் பொங்கி தங்கள் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.
சமய வழிபாடுகளையும் பாரம்பரியங்களையும் பேணிப்பாதுகாக்கும் நோக்கில் பொங்கல் பொங்கி தொன்று தொட்டுவந்த மரபு வழிபாடு மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளதாக பிரதேச இளைஞர்கள் தெரிவிக்கின்றனர்.
படங்கள் – குமணன், முல்லைத்தீவு.
Spread the love