தெலுங்கானாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிகை;கை 53 ஆதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறுபது பேர் மட்டுமே பயணிக்கக்கூடிய குறித்த பேருந்தில் அளவுக்கும் அதிகமானவர்கள் பயணித்ததாகவும், விபத்தின்போது ஒருவர் மீது ஒருவர் சரிந்து விழுந்ததாகவும் விபத்தில் பேருந்து சாரதியும் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
தெலுங்கானாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து – குறைந்தது 30 பேர் பலி
Sep 11, 2018 @ 08:24
தெலுங்கானா மாநிலத்தில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 30 பேர் வரை பலியானதாக தகவல் வெளியாகி உள்ளன. தெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப்பகுதியில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த குறித்த பேருந்து திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் உடனடியாக மீட்புக்குழுவினருக்கு தகவல் வழங்கப்பட்டதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், விபத்தில் காயமடைந்து 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.