இந்தியப் பிரதமர் மோடியை கொல்ல சதி என கூறி கைது செய்யப்பட்ட 5 மனித உரிமை ஆர்வலர்களின் வீட்டுக்காவலை 17-ம் திகதி வரை நீடித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகாராஷ்டிராவின் கோரேகான்-பீமா கிராமத்தில் இரு சமூகத்தினர் மோதிக் கொண்ட நிலையில் வன்முறையை தூண்டும்வகையில் பேசியதாக குறித்த மனித உரிமை ஆர்வலர்கள் 5 பேரும் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டிருந்தனர்.
டெல்லியில் கைதான ஒருவரிடம் கைப்பற்றப்பட்ட கடிதத்தில், ராஜீவ் காந்தி கொலை பாணியில், பிரதமர் மோடியை கொலை செய்வோம் என மாவோயிஸ்டுகள் எழுதி இருந்ததாகவும் அந்த கடிதத்தில், இடதுசாரி எழுத்தாளர் பி.வரவர ராவின் பெயர் இருந்தததாகவும தெரிவித்து அவரை கைது செய்தனர்.
அNதுபோன்று தெலுங்கானா, மராட்டியம், அரியானா, ஜார்கண்ட், டெல்லி, கோவா, சத்தீஷ்கார் என மொத்தம் 7 மாநிலங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டதுடன் அனைவரும் கைதாகினர்
இந்நிலையில், இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக 5 பேர் உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தநிலையில் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா அமர்வு கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், 5 பேரின் வீட்டுக்காவலை 17-ம் திகதி வரை நீடித்துள்ளார்.