197
பிரபல நடிகர் தனுஷின் முதல் ஹொலிவுட் படமான `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஒஃப் தி ஃபகிர்’ படத்திற்கு சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷ் ஹொலிவுட்டில் அறிமுகமான `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ படத்திற்கு நோர்வே நாட்டின் ஹாகசண்டில் நடைபெறும் நோர்வே சர்வதேச திரைப்பட விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
இங்கு பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. இதில் தனுஷின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ படமும் திரையிடப்பட்டுள்ளது. படத்தை பார்த்த தேர்வுக் குழுவினர் படத்திற்கு விருது வழங்கி கௌவுரவித்துள்ளதாக படத்தின் இயக்குநர் கென் ஸ்காட் அவரது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
`தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற நாவலை தழுவி காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் தற்போது அவரது இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். பிரம்மாண்ட கூட்டணியுடன் உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
Spread the love