அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு விசாரணையை டெல்லி உயர் நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணை செய்கிறது. அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு தேர்தல் ஆணையகம் வழங்கிய உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றில் டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் சிஸ்தானி, சங்கீதா டிங்ரே ஆகியோர் அடங்கிய அமர்வில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் சார்பில் செம்மலை தரப்பு சட்டத்தரணி முன்னிலையானார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை இன்று (13.09.18) ஒத்திவைத்தனர். அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெறுகிறது.இதற்கிடையே அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் டெல்லி உயர் நீதிமன்றில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.