தொழிலதிபர் விஜய் மல்லையா வெளிநாட்டிற்கு ஏன், எப்படி தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார் என காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கேள்வி எழுப்பியுள்ளார். நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக விஜய் மல்லையா கூறியது பற்றி காங்கிரஸ் தொடர் கேள்விகளை எழுப்பி உள்ள நிலையில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி மேற்படி கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேலும் விஜய் மல்லையா உள்ளிட்டோர் தப்பிச் செல்வதற்கு இந்திய மத்திய அரசு உடந்தையாக இருந்துள்ளது. விஜய் மல்லையா ஏன், எப்படி தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார்? அவருக்கும், நிதி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பில் பேசப்பட்டது என்ன? என அறிந்துகொள்ள நாடு விரும்புகிறது. அதற்கு மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என அபிஷேக் சிங்வி வலியுறுத்தி உள்ளார்.