சர்வதேச கிரிக்கெட் சபையின் போட்டித் தரவரிசையில் இங்கிலாந்து அணி நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தியாவுக்கெதிரான தொடரை 4-1 என்ற ரீதியில் வென்றதையடுத்து ஐந்தாமிடத்தில் இருந்த இங்கிலாந்து அணி நான்காமிடத்துக்கு முன்னேறியுள்ளது.
புள்ளிகளில் வீழ்ச்சி எதிர்நோக்கியிருந்தாலும் இந்திய அணி தொடர்ந்தும் முதலாம் இடத்தினையே வகிக்கின்றது. தென்னாபிரிக்கா இரண்டாவது இடத்திலும் அவுதிஸ்ரேலியா 3ம் இடத்திலும் உள்ளன. 4ம் இடத்திலிருந்த நியூசிலாந்து அணி 5ம் இடத்திற்கு சென்றுள்ள நிலையில் இலங்கை 6ம் இடத்தில் உள்ளது.
இதேவேளை டெஸ்ட் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், இந்திய அணியின் தலைவர் விராட் கோலி முதலாம் இடத்தில் தொடரும் அதேவேளை இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட்,ஐந்தாமிடத்திலிருந்து நான்காமிடத்துகு முன்னேறியுள்ளார்.
மேலும் ஓய்வு பெற்ற இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரான அலிஸ்டையர் குக், தனது இறுதிப் போட்டியில் 218 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 11 இடங்கள் முன்னேறி 10ஆம் இடத்துடன் ஓய்வுபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது