ஜெர்மனியில் பாதிரியார்கள் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1946ஆம் ஆண்டில் இருந்து 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ரோமன் கத்தோலிக்க பாதிரியார்களால் 3,600க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக அண்மையில் வெளியாகியுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆய்வை கிறிஸ்தவ திருக்கோயிலே ஆரம்பித்திருந்தநிலையில் அதன்படி, சுமார் 1,670 பாதிரியார்கள், 3,677 குழந்தைகள் மீது பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கண்டனத்திற்குரியது எனவும், அவமானகரமான ஒன்று எனவும் குறித்த கிறிஸ்தவ தேவாலயயத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.