156
காஷ்மீரில் மலைச்சாலையில் சென்று கொண்டிருந்த வான் ஒன்று இன்று காலை ஆற்றுப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love