குளோபல் தமிழ் செய்தியாளர்
இந்திய அமைதிப் படைகளுக்கு எதிராக உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த லெப்டினன் கேணல் தியாகி திலீபனின் நினைவுநாட்கள் இன்று முதல் ஆரம்பமாகின்றன. 1987 செப்டம்பர் 15ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரையான பன்னிரு நாட்கள் இவர் உண்ணா நோன்பிருந்தார். இந்த நாட்கள் தியாகி திலீபனின் நினைவு நாட்களாக நினைவுகூறப்படுகின்றன.
இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் நல்லூரில் தியாகி திலீபன் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் அவரது நினைவிடத்தில் தீபம் ஏற்றி முதல்நாள் நினைவுநாள் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
2009இற்குப் பின்னரான காலத்தில் தியாகி திலீபனின் நினைவே நாட்கள் அனுஷ்டிக்க இடமளிக்கப்படாத நிலையில் கடந்த 2016ஆம் முண்டு முதல் நினைவேந்தலுக்கு அனுமதிக்கப்பட்டது. இந் நிலையில் திலீபன் நினைத் தூபியை புனமைக்க யாழ் மாநகர சபை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.