தமிழ் சினிமாவின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்த சில்க் சுமிதா கடைசியாக நடித்து வெளிவராமல் இருந்த ‘ராக தாளங்கள்’ படத்தை வெளியிடவிருப்பதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். 1980-ல் அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவின் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்த சில்க்சுமிதா 1996-ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
அவர் இறந்து 22 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் அறிமுகமான இயக்குனரின் கடைசி படமான ‘ராக தாளங்கள்’ படத்தை வெளியிட முயற்சி நடைபெறுகின்றது.1979-ம் ஆண்டு சில்க் சுமிதாவை ஆந்திராவில் இருந்து அழைத்து வந்து சுமிதா என்று பெயர் சூட்டினேன். எனது படமான வீணையும் நாதமும் படத்தில் சில்க்கு அறிமுகம் ஆனார்.
அவர் நடித்த கடைசி படம் இதுதான். 1995-ல் இந்த படத்தில் சாதி பிரச்சினையை பற்றி பேசி இருந்ததால் சென்சார் பிரச்சினை வந்ததால் பட்ததினை வெளியிட முடியவில்லை. இப்போது அதனை வெளியிட முடிவு எடுத்துள்ளேன் என படத்தின் இயக்குனர் திருப்பதி ராஜன் தெரிவித்துள்ளார்.சில்க் சுமிதாவின் மரணம் பற்றி கேட்டபோது அவரது குடும்ப வாழ்க்கை நிம்மதியாக அமையவில்லை எனவும் அதுபற்றி விசாரித்தால் மழுப்பி விடுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
தற்கொலை செய்வதற்கு சில நாட்களுக்கு முன்பும் என்னை பார்க்க வர சொன்னார். ஆனால் சிலர் என்னை விடவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.