தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா, அவரது தந்தையும், பிரபல இசையமைப்பாளருமான இளையராஜா வழியை பின்பற்றி வருகின்றார்.
சின்ன பட்ஜெட் படம் என்றால் சம்பளம் பெரிதாக எதிர்பார்க்காமல் குறைவான தொகையை வாங்கிக்கொண்டு இளையராஜா இசை அமைத்து கொடுப்பார். அதே முறையைப் பின்பற்றி தந்தை வழியில் யுவன் சங்கர் ராஜாவும் இந்த வழக்கத்தை கடைபிடித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது
விரைவில் வெளியாக இருக்கும் ராஜா ரங்குஸ்கி என்ற படம் பர்மா, ஜாக்சன் துரை படங்களை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் மெட்ரோ சிரிஷ், சாந்தினி நடித்திருக்கும் இந்த படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகின்றது. படம் ஒரு கிரைம் திரில்லர் என்பதால் யுவன் இசை அமைத்தால் நன்றாக இருக்கும் என எண்ணி அவரை அணுகி இருக்கிறார்கள். தான் வழக்கமாக வாங்கும் சம்பளத்தில் இருந்து கணிசமான தொகையை குறைத்து, குறைந்த சம்பளத்தில் அந்தப் படத்துக்கு இசையமைத்து கொடுத்து இருக்கிறார்.
‘வெங்கட்பிரபு, செல்வராகவன் போன்ற பெரிய இயக்குனர்களுக்கு தருகிற அதே முக்கியத்துவத்தையும், மரியாதையையும் எனக்கும் கொடுத்தார். என் வாழ்க்கையில் மறக்க முடியாத நபர் யுவன்’ என இயக்குனர் தரணிதரன் தெரிவித்துள்ளார். ராஜா ரங்குஸ்கி படம் 25 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது