196
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் விமானத் தாக்குதலினால் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது. 1999ஆம் ஆண்டில் முல்லைத்தீவின் புதுக்குடியிருப்பு மந்துவில் கிராமத்தில் இலங்கை அரச விமானங்கள் நடாத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
இப் படுகொலையின் 19ஆவது ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு நேற்றைய தினம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் பூமாலைகளினாலும் தீபங்களினாலும் அஞ்சலி செலுத்தியதுடன் கண்ணீர் விட்டு கதறியும் நீதியை வலியுறுத்தினர்.
Spread the love