இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.ஹிஸ்புல்லாவையும் அவரது மகன் உள்ளிட்ட சந்தேகநபர்களையும் உடனடியாகக் கைதுசெய்து, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு வாழைச்சேனை நீதவான் எம். ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார். சவூதி அரேபிய அரசின் நிதியுதவியின் கீழ், மட்டக்களப்பு பல்கலைக்கழக நிர்மாணப் பணிகளுக்காக இணைத்துக்கொள்ளப்பட்ட நிறுவனத்தின் 94 மில்லியன் ரூபாய் பெறுமதியான இயந்திரங்கள் மற்றும் பொருட்களைக் கடத்தியதுடன், அந்தப் பொருட்கள் குறித்து நம்பிக்கையற்ற தகவல்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவ்வாறு கைதுசெய்யுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லங்கா பில்டேர்ஸ் கோப்பரடிவ் சொஸையிட்டி என்ற நிறுவனத்தின் தலைவர் பிரபாத் உக்வத்த காவல்துறைமா அதிபரூடாக கடந்த ஜனவரி மாதம் குற்ற விசாரணை திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.