அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்வது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. நேற்றையதினம் புஞ்சி பொரளையிலுள்ள வஜிராசிரம பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இணைந்து இதனை வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை பிரபல அமைச்சர்கள் இருவர், கிங் – நில்வளா அபிவிருத்தி திட்டத்தில் பாரிய ஊழல் மோசடியை செய்துள்ளதாக வெளிவந்துள்ள ஊடகச் செய்தியைச் சுட்டிக்காட்டிய பிரேமஜயந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு, குறித்த இருவரையும் கண்டறிய வேண்டுமெனவும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.