205
அமெரிக்கா, பிலிப்பைன்சை தொடர்ந்து நைஜீரியாவில் சில தினங்களாக பெய்துவரும் கனமழை காரணமாக 100 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் நைஜீரியாவில் 10க்கும் மேற்பட்ட மாகாணங்கள் வெள்ளத்தில் முழ்கியுள்ளநிலையில் அங்குள்ள கோகி, நைஜர், அனம்ப்ரா மற்றும் டெல்டா ஆகிய மாகாணங்களை பேரிடர் மாகாணங்களாக அந்நாட்டு பேரிடர் மீட்பு குழு அறிவித்துள்ளது.
மேலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் அந்த மாகாணங்களில் நிவாரண மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் வெள்ளம் வடிந்ததும் விரைவில் மீட்பு பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love