ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது இன அழிப்பில் ஈடுபட்ட அதிகாரம் மிக்க மியன்மார் ராணுவம் அரசியலிருந்து அகற்றப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. மியன்மரில்; ராக்கைன் மாநிலத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ள பகுதிகளில், அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது மியன்மார் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக போராட்டக்காரர்கள் உட்பட பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக பங்களாதேசுக்கு இடம்பெயர்ந்தனர்.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் தொடர்பாக கடந்த 18 மாதமாக நடந்தப்பட்ட விசாரணையின் இறுதிக் கட்ட அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது.அதில் மியன்மாரின் கொடூரமான செயல் காரணமாக சுமார் 7 லட்சம் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பங்களாதேசுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
அந்தவகையில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட மியன்மாரின் சக்தி வாய்ந்த ராணுவம் அரசியலிருந்து அகற்றப்பட வேண்டும் எனவும் தவறிழைத்த ராணுவ அதிகாரிகள் ; மாற்றப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரைப் பொறுத்தவரை ஆங் சாங் சூச்சி தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தாலும், ராணுவமே அந்நாட்டின் அதிகப்பட்ச அதிகாரத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது