குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தற்போது ஏற்பட்டுள்ள கடுமையான வறட்சி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள பிரதேசமாக பூநகரி காணப்படுகிறது. எனவே இது தொடர்பான புள்ளிவிபரத் தகவல்களை பெறுவதற்காக பூநகரி பிரதேச செயலகத்திற்குச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு இன்று(19-08-2018) தகவல்களை வழங்க முடியாது என பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது
பூநகரி பிரதேச செயலக பிரிவில் எத்தனை கிராமங்களில் எவ்வளவு மக்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல்களை மாத்திரமே கோருவதற்காக சென்ற ஊடகவியலாளர்களுக்கு இன்று பொது மக்கள் தினம் என்பதனால் தகவல்கள் வழங்க முடியாது என தனது அலுவலக உதவியலாளர் மூலம்; பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்
குறித்த தகவல்கள் ஏற்கனவே தயார் நிலையில் பிரதேச செயலகததின் அனர்த்து முகாமைத்துவ பிரிவில் காணப்படுவது வழக்கமாகும.; இதனை வழங்குவதற்கு சில நிமிடங்கள் போதுமானது இருந்தும் குறித்த தகவல்களை இன்று(18) பிரதேச செயலாளர் வழங்க மறுத்துவிட்டார்
பூநகரியில் தற்போது கடும் வறட்சி நிலவி வருகிறது பொது மக்கள் குடிநீர்த் தேவை உட்பட நீர்த்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். அத்தோடு கால்நடைகளும் குடிநீருக்காக அலைந்து திரிவதாகவும் பொது மக்கள் குறிப்பிடுகின்றனர்.