வடமேற்கு லண்டனில் உள்ள பிரென்ட் என்ற பகுதியில் இன்று அதிகாலை மசூதிக்கு அருகில் பொதுமக்கள் மீது காரொன்று மோதியதில் மூவர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இருவர் இருபது வயதுடையவர்கள் எனவும் மூன்றாவது நபர் 50 வயதான ஒருவர் எனவும் அவருக்கு கால்ப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
மோதிய காரில் இருந்த மூன்று ஆண்களும் பெண்ணொருவரும் இஸ்லாமிய மக்களுக்கெதிராக எதிராக கோசங்களை எழுப்பியபடி வந்து பொதுமக்கள் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை பயங்கரவாத நடவடிக்கை என்ற கோணத்தில் விசாரணை செய்யவில்லை எனவும் வெறுப்புணர்வினால் இடம்பெற்ற குற்றச்செயல் என்ற கோணத்திலேயே விசாரணை செய்வதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த மசூதியில் விரிவுரையொன்றை ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய அமைப்பொன்று இது இஸ்லாமிய வெறுப்புணர்வை மையமாக கொண்ட தாக்குதல் என குறிப்பிட்டுள்ளது.