145
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், இன்று (20) நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டடுள்ளது. குறித்த கூட்டமானது, கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், இன்று (20.09.18) இரவு 7 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகப் பூர்வ இல்லத்தில் நடைபெறுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்த, கட்சியின் செயலாளர் ரோஹன லக்ஷமன் பியதாஸ, அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேருக்கும் அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love