25 வருடங்களுக்குப் பின்னர் உதைபந்தாட்ட தரவரிசையில் இரு அணிகள் முதல் இடத்தை பிடித்துள்ளன. ரஸ்யாவில் நடைபெற்ற உலகக்கிண்ண கால்பந்து தொடரில் குரோசியாவை வீழ்த்தி பிரான்ஸ் கிண்ணத்தினைக் கைப்பற்றியதனால் தரவரிசையில் முதலித்தினைப் பிடித்திருந்தது.
இந்தநிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நேஷன்ஸ் லீக் தொடரில் பெல்ஜியம் அணி ஐஸ்லாந்தை வீழ்த்தியதன்மூலம் பிரான்ஸ் உடன் இணைந்து பெல்ஜியம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் அணிகள் 1729 புள்ளிகளுடன் முதலாவது இடத்திலும் பிரேசில் 1663 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் குரோசியா 1634 புள்ளிகளுடன் 4வது இடத்திலும் உருகுவே -1632 புள்ளிகளுடன் 5வது இடத்திலும் இங்கிலாந்து 1612 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் போர்த்துக்கல் 1606 புள்ளிகளுடன் 7வது இடத்திலும் சுவிட்சர்லாந்து 1598 புள்ளிகளுடன் 8வது இடத்திலும் ஸ்பெயின் 1597 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் டென்மார்க் 1581 புள்ளிகளுடன் 10 வது இடத்திலும் உள்ளன.