Home இலங்கை பிரிக்கப்படாத நாட்டின் சகல மக்களும் அபிவிருத்தியின் வரப்பிரசாதங்களை உருவாக்கக்கூடிய தலைமைத்துவம் தற்போதுள்ளது

பிரிக்கப்படாத நாட்டின் சகல மக்களும் அபிவிருத்தியின் வரப்பிரசாதங்களை உருவாக்கக்கூடிய தலைமைத்துவம் தற்போதுள்ளது

by admin

பிரிக்கப்படாத நாட்டின் சகல மக்களும் அபிவிருத்தியின் வரப்பிரசாதங்களை பெற்று சமாதானத்துடனும் ஒற்றுமையாகவும் வாழக்கூடிய நாட்டை உருவாக்கக்கூடிய தலைமைத்துவம் தற்போது நாட்டில் காணப்படுவதாக எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். நாட்டை ஒன்றிணைக்கக்கூடிய அந்த தலைமைத்துவத்தினூடாக எமது நாடு அபிவிருத்தியை நோக்கி செல்லும் எனவும்  அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘சிறிசர பிவிசும’ நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் வறிய மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் இத்தகைய அபிவிருத்தி செயற்திட்டத்தை அன்று நாட்டில் அவதானிக்க முடியாது போனது என குறிப்பிட்ட எதிர்க்கட்சி தலைவர், தற்போது இடம்பெற்று வரும் இந்த அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு சகலரது ஒத்துழைப்பும் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More