குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் பேசாலையில் அமைந்துள்ள தனியார் கடல் உணவு கொள்வனவு நிலையத்தில் காணப்பட்ட ‘தராசு’ அளவீடுகள் பிழையாக காணப்பட்ட நிலையில் குறித்த நிலையத்திற்கு எதிராக மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
-மன்னார் பேசாலை கடற்கரை பகுதியில் அமைந்திருந்த குறித்த தனியார் கடல் உணவு கொள்வனவு நிலையத்திற்கு நேற்று வியாழக்கிழமை(20) இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை அதிகாரிகள் சென்று திடீர் சோதனைகளை மேற்கொண்டனர்.
இதன் போது குறித்த நிலையத்தில் கடல் உணவுகளை நிறுவை செய்வதற்காக காணப்பட்ட தராசுகள் அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்ட போது குறித்த தராசுகளின் அளவீடுகளில் பிழை உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த கடல் உணவு கொள்வனவு நிலையத்திற்கு எதிராக நேற்று (20) வியாழன் மதியம் மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை அதிகாரிகள் மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தனர்.
தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த கடல் உணவு கொள்ளனவு நிலையத்தின் உரிமையாளருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராத தொகையாக செலுத்த உத்தரவிட்டார்.