Home பிரதான செய்திகள் மன்செஸ்டர் சிற்றி அணி உடனான ஒப்பந்தத்தை நீடித்த செர்ஜியோ அக்யூரொ

மன்செஸ்டர் சிற்றி அணி உடனான ஒப்பந்தத்தை நீடித்த செர்ஜியோ அக்யூரொ

by admin


ஆர்ஜென்ரீன வீரர் செர்ஜியோ அக்யூரொ (Sergio Aguero  மன்செஸ்டர் சிற்றி அணி உடனான ஒப்பந்தத்தை 2021 வரை நீட்டித்துள்ளார். 30 வயதான அக்யூரோ கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து மன்செஸ்டர் சிற்றி அணிக்காக விளையாடி வருகிறார்.
இவரது ஒப்பந்தம் 2020 உடன் முடிவிற்கு வருகின்ற நிலையில் சொந்த நாட்டுக்கு திரும்பி இளம் வயதில் விளையாடிய கழகத்திற்காக விளையாடவிருப்பதாக தெரிவித்திருந்தார்.

எனினும் அவர் கடந்த 2017-18 காலப்பகுதியில் இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் சம்பியன் போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்ததன் காரணமாக மன்செஸ்டர் சிற்றி அவருடனான ஒப்பந்தத்ரினை மேலும் நீடித்துள்ளது.

அக்யூரோ மன்செஸ்டர் சிற்றி அணிக்காக 210 போட்டிகளில் விளையாடி 146 கோல்கள் அடித்துள்ளார். இதுவரை வாரத்திற்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் பவுண்ட்ஸ் வாரச் சம்பளமாக பெற்ற இவரது சம்பளம் 3 லட்சத்து 50 ஆயிரம் பவுண்ட்ஸ்களாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More