ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்ற ஆசிய கிண்ண சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து நடப்பு சம்பியனான இந்தியா மற்றும் பாகிஸ்தானும் ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ் அணிகள் அடுத்த சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வியை தழுவிய இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் வெளியேறியுள்ளன.
இந்நிலையில் இன்று ஆரம்பமாகிய சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஸ் விளையாடிய ஒரு போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதல்லில் துடுப்பெடுதாடிய பங்களாதேஸ் அணி 49.1 ஓவரில் 173 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்திருந்தது. இதனையடுத்து 174 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 36.2 ஓவர்கள் முடிவில் 174 ஓட்டங்கைள எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதேவேளை ஆப்கானிஸ்தான் அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடு;தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 257 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி 49.3 ஓவர்கள் முடிவில் 258 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கெட்டுக்கள் வெற்றி பெற்றது.