உணவு விஷமானதால் மினுவாங்கொட பிரதேசத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலையின் சுமார் 300 பணியாளர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். காய்ச்சல், வாந்தி, மயக்கம் போன்ற நோய் நிலைமைகளால் குறித்த பணியாளர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 150 இற்கும் அதிக பணியாளர்கள் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையிலும், சுமார் 135 பேர் வரை மினுவாங்கொட மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் சிலர் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு விஷமானதால் 300 பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்…
183
Spread the love