ரஸ்ய ஊக்க மருந்து தடுப்பு ஆணையகம் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை சர்வதேச அமைப்பான வாடா (WADA) நீக்கியுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு ரஸ்ய தடகள வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தி இருந்த நிலையில் அவர்களை காப்பாற்றுவதற்காக அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு ஆணையகம் விளையாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் பல்வேறு வழிமுறைகளை கையாண்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து ரஸ்ய வீரர்களின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்ய உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பான வாடாவுக்கு அனுமதி வழங்கப்படாததன் காரணமாக வாடா ரஸ்ய வின் ஊக்க மருந்து தடுப்பு அமைப்புக்கு தடை விதித்தது.
இதனால் கடந்த 3 ஆண்டுகளாக ரஸ்ய தடகள வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் வாடா செயற்குழு கூட்டத்தில் ரஸ்ய ஊக்க மருந்து ஆணையகம் மீதான தடையை நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது தடை நீக்கப்பட்டதால் ரஸ்ய தடகள வீரர்கள் இனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது