காணாமல் போனோர் தொடர்பில் காணாமல் போனோர் அலுவலகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான விசேட உபகுழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயதாஸ ராஜபக்ஸ தலைமையில் 9 அமைச்சர்கள் உள்ளடங்கலாக இந்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது . காணாமல் போனோர் அலுவலகத்தின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள உபகுழுவிற்கு அவசியமான உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்கு உதவி உபகுழுவொன்றினை நியமிப்பதற்கான பரிந்துரையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தக்குழுவில் விஜயதாஸ ராஜபக்ஸ தலைமையில் சரத் அமுனுகம, ரவூப் ஹக்கீம், வஜிர அபேகுணவர்தன, மகிந்த அமரவீர, ரஞ்சித் மத்தும பண்டார, பழனி திகாம்பரம், தலதா அதுகோரள, மனோ கணேசன், மகிந்த சமரசிங்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.