ரபேல் போர் விமான ஊழல் விவகாரம் குறித்து விவாதிக்க்க நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரியுள்ளார். பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ், பா.ஜ.க இடையே மோதல் தீவிரம் அடைந்துள்ளது.
இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி; பிராங்கோயிஸ் ஹொலன்டே, இந்திய அரசின் ஆலோசனைக்கு அமைவாகவே அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் ரபேல் போர் விமானங்களை தயாரிக்கும் ‘டஸ்ஸால்ட்’ ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது எனத் தெரிவித்திருந்தர்.இந்திய அரசால் கைகாட்டப்பட்ட ஒரு நிறுவனத்தை தனது ஆட்சி காலத்தில் இந்த ஒப்பந்தத்தில் இணைத்ததாகவும், இதில் பிரான்ஸ் அரசு முடிவுசெய்ய எதுவுமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேரடியாக குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.