ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டுப் படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவை சந்திப்பதற்காக சென்ற இந்தியர் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தியர் பல தடவைகள் தன்னை சந்திப்பதற்காக தனது வீட்டுக்கு வந்ததாகவும் இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்ட சந்தேகத்தினால் தான் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தததனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.53 வயதான இந்தியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள சட்டம் மற்றும் ஒழுங்குகள் பிரதி அமைச்சர் நளின் பண்டார, நாமல் குமாரவின் பாதுகாப்பு கோரிக்கை எதுவும் இதுவரை தமது புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கவில்லை எனவும் எனினும் அவரின் பாதுகாப்பு குறித்து தமது அதிகாரிகள் அவதானத்துடன் செயற்படுகின்றனர் எனத் தெரித்தார்.மேலும் நாமல் குமாரவுக்கு மேலதிக பாதுகாப்பு தேவை ஏற்படும் பட்சத்தில் வழங்கி வைக்கப்படும் எனவும், நாமல் குமாரவின் வீட்டுக்குச் சென்ற சந்தேகநபரிடம் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுப்பர் எனவும் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியையும் கோத்தபாய ராஜபக்ஸவையும், மாகந்துரே மதுஷ் என்பவரைக் கொண்டு, படுகொலை செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக, ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்திருந்த நாமல் குமார வாக்குமூலம் வழங்குவதற்காக எதிர்வரும் 26ஆம் திகதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்படடுள்ளமை குறிப்பிடத்தக்கது.