அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்தமையால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ளவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாத்தாண்டியாவில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடி தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் கடந்த காலங்களில் சவால்களுக்கு முகங்கொடுத்து முன்னோக்கிச் சென்றதைப் போன்று டொலரின் பெறுமதி அதிகரித்தமையால் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் வெற்றிகரமான முறையில் எதிர்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதாரம் போன்றவற்றின் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்த பிரதமர் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமை இலங்கைக்கு மாத்திரம் ஏற்பட்டுள்ள பிரச்சினை இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலக பொருளாதார நெருக்கடிக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதாகவும் அதிலிருந்து தப்பியோட முனையவில்லை எனவும் தெரிவித்தார்.