டெல்லியில் இயங்கிவரும் மஹரிஷி வால்மீகி என்ற அரசு மருத்துவமனையில் தொண்டை அழற்சி நோய்க்கான மருந்து பற்றாக்குறையால், கடந்த 14 நாட்களில் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இந்த மருத்துவமனையில் தொண்டை அழற்சி நோயால் சிறுவர்கள் முதல் குழந்தைகள் வரை பலர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் தொண்டை அழற்சிக்கான மருந்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதனால் குழந்தைகளுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மேலும், மருந்துகளை பெற்றோரை வாங்கி தருமாறும் வற்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இந்நிலையில், மருத்துவமனையில் ஏற்பட்ட மருந்து குறைபாடால், கடந்த 14 நாட்களில் 13 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்த வித தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.