கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் இயங்கும் தேவாலயங்களுக்கு வத்திக்கான் ஆயர்களை நியமித்து வரலாற்று சிறப்பு மிக்க புதிய இணைப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற நாடுகளில் ஒன்றான சீனா கம்யூனிச நாடாகவே அறியப்படுகிறது. இங்கு மதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவது குறித்து பலதரப்பட்ட கருத்துக்கள் இருந்தாலும், அதிக அளவில் புத்த மதமே இங்கு பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில், வத்திக்கான் சீனாவுடன் புதிய வரலாற்று சிறப்பு மிக்க இணைப்பை, ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், சீனாவில் உள்ள தேவாலயங்களுக்கு வத்திக்கான் நேரடியாக ஆயர்களை நியமித்துள்ளது.இதன்மூலம், சீனாவுக்கும், வத்திக்கானுக்கும் இடையேயான உறவு மேம்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நேற்று வத்திக்கானில் இருந்து நியமிக்கப்பட்ட ஆயர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பேசிய சீன கத்தோலிக்க தேவாலய ஆயர்கள், சோசியலிச நாட்டுக்கு தகுந்த வகையில் தாங்கள் நடந்துகொள்யவுள்டளதாகவும், சீன அரசின் தலைமையிலேயே செயல்பட உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளனர்.