உலகில் நிகழும் மரணங்களில் ஏனைய காரணங்களைவிட மதுப் பழக்கம் காரணமாக ஏற்படும் மரணங்கள் 5 சதவீதம் அதிகம் என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் 30 லட்சம் பேர் மதுப் பழக்கத்தின் பாதிப்புகளால் உயிரிழக்கின்றார்கள் எனவும் 20 வயதுகளில் இருப்பவர்களில் 13.5 வீதமானோர் மதுப் பழக்கம் காரணமாகவே உயிரிழக்கின்றார்கள் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூகத்தில் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதில் ஒவ்வொரு நாடுகளினதும் அரசாங்கங்கள் கூடுதல் முனைப்பு காட்ட வேண்டும் எனவும் இல்லாவிடில் பெரும் பாதிப்புகள் ஏற்படும் எனவும் உலக சுகாதார நிறுவனத்தின் மதுக்கட்டுப்பாட்டுப் பிரிவின் நிபுணர் விளாடிமிர் போஸ்ன்யா தெரிவித்துள்ளார்.