இங்கிலாந்து அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலியை ஒசாமா என அவுஸ்திரேலியா வீரர்கள் அழைத்தமைக்கான ஆதாரம் இல்லை என தெரிவித்து அவுஸ்திரேலியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இந்த விவகாரத்தை முடிவிற்கு கொண்டு வந்துள்ளது.
மொயீன் அலி தனது சுயசரிதை புத்தகத்தில் 2015 ஆஷஸ் தொடரின்போது அவுஸ்திரேலியா வீரர் தன்னை ஒசாமா எனக் குறிப்பிட்டு இனவெறியை தூண்டிம் வகையில் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியிருந்த நிலையில் அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அவுஸ்திரேவிய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் இணைந்து இந்தச் சம்பவம் அப்போதே விசாரிக்கப்பட்டு அதன் முடிவையும் மொயீன் அலியிடம் தெரிவிக்கப்பட்டதனையடுத்து அவரும் இதனை மேலும் முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை.
மேலும், புதிய விசாரணைகளில் அவரது முறைப்பாட்டுக்கான புதிய ஆதாரங்களும் எதுவும் கிடைக்கவில்லை என்பதனபல் இந்த விவகாரம் இத்துடன் முடிவுக்கு வருகிறது என அவுஸ்திரேய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.