246
மகாராஷ்டிரா மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க முற்பட்ட போது ஒரே நாளில் 18 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகின்ற நிலையில் இந்த விழாவை முன்னிட்டு செய்யப்பட்ட பல்வேறு விதமான சிலைகள் கடல், ஏரி, ஆறுகள் என நீர்நிலைகளில் கரைப்பது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பல்வேறு நகரங்கள் மற்றும் சில கிராம பகுதிகளில் விநாயகர் சிலைகளை கரைக்கும் விழாவின் போது ஒரேநாளில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love